வீரக்கல் கிராமத்தின் வரலாறு
தமிழகத்தில் பல கிராமங்கள் உள்ளன; அவை தனக்கென வரலாற்று முக்கியத்துவத்தை .கொண்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ள வீரக்கல் கிராமமும் ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. இந்த கிராமம் கல்வெட்டுகள் மற்றும் வீரக்கற்கள் போன்ற தொல்பொருள் சான்றுகளால் குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக புலிகுத்திக்கல் போன்ற வீரக்கற்கள் இந்த கிராமத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. மேலும் இக்கிராமத்தின் சமூக அமைப்பு மற்றும் கலாச்சார மரபுகள் அதன் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. வீரக்கல் கிராமத்தின் பெயர் காரணம் வீரக்கல் என்ற பெயர் இக்கிராமத்திற்கு வருவதற்கு பல செவி வழி கருத்துக்கள் உள்ளன. அதில் முக்கியமானது இக்கிராமத்தில் உள்ள வீரக்கல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. வீரக்கல் என்பது வீரத்தின் அடையாளமாக மக்களிடையே கருதப்படுகிறது. வீரக்கற்கள் வரலாற்று சின்னங்களாகவும் ஆதரங்களாகவும் உள்ளன. ஒரு வீரனின் நினைவாக வைக்கப்படுவதே வீரக்கல் அல்லது அந்த வீரனின் வீரசெயலை,நினைவுகூருவதற்காகவே வைக்கப்படுகிறது. வீரக்கல் கிராமத்தில் புலிகுத்திக்கல் உள்ளது அதில் ஒரு வீரன் புலி தாக்குவது போன்ற க...

%20(24).jpeg)

%20(10).jpeg)
